சிறுவனை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
Dindigul King 24x7 |31 July 2024 3:44 PM GMT
சிறுவனை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு முன்பகை காரணமாக 6 வயது சிறுவனை கொலை செய்த நத்தம் கோட்டையூர் சின்னையம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜய் ரத்தினம் (22) என்பவரை நத்தம் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்., அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி, நீதிமன்ற முதல்நிலைக் காவலர் சண்முகவேல் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி சீரிய முயற்சியால் இன்று 31.07.2024-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி அஜய் ரத்தினம் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
Next Story