சாணார்பட்டியில் இந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Dindigul King 24x7 |1 Aug 2024 3:09 AM GMT
சாணார்பட்டியில் இந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரில் இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன், பத்மகிரிஸ்வரர் சிலைகளை பிரதிஷ்ட செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தொண்டரணிதலைலைர் மோகன் முன்னிலை வைத்தார். மாவட்டத் தலைவர் நாகராஜ் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநிலச் செயலாளர் மணிகண்டன்,வினோத்குமார், மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் செயலாளர் சிவக்குமார் ,மாநில தொண்டரணி பொதுச் செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story