சர்வீஸ் சாலை அமைக்க மண் சோறு சாப்பிடும் நூதன போராட்டம்!.
Thoothukudi King 24x7 |1 Aug 2024 5:19 AM GMT
கோவில்பட்டியில் சர்வீஸ் சாலை அமைப்பதில் தாமதம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு பூஜை நடத்தி 5வது தூண் அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்..
கோவில்பட்டியில் சர்வீஸ் சாலை அமைப்பதில் தாமதம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு பூஜை நடத்தி 5வது தூண் அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தின் இரு பகுதிகளிலும் திட்டமிட்டபடி சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும், முழுமையாக நில எடுப்பு எடுத்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும், மேலும் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது தூண் அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் கோவில்பட்டி தாலுகா அலுவலக வாயில் முன்பு மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு கல்லை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி பூஜை செய்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் ஊமையாக இருப்பதாகவும்,, ஆகையால் ஊமைச்சாமி நமக என்று வேத மந்திரங்கள் முழங்கி. போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
Next Story