மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிகள் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம்.
Karur King 24x7 |1 Aug 2024 6:03 AM GMT
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிகள் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம்.
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிகள் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம். மத்திய அரசு அண்மையில் அறிவித்த பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் விமர்சனமும், போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் ஜவஹர் பஜார், பேருந்து நிலைய ரவுண்டான பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் லெனிலிஸ்ட் கட்சி சார்பில், மாவட்டச் செயலாளர்கள் ஜோதிபாசு, நாட்ராயன், ராமச்சந்திரன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை சி பி ஐ எம் மாநில குழு உறுப்பினர் பாலா துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கரூர்- திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் கரூர் மாநகராட்சி உறுப்பினர் தண்டபாணி உள்ளிட்ட மூன்று கட்சிகளை சேர்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story