மகாபாரத கதை வேடம் அணிந்து நடிக்கும் களைஞர்கள்.
Paramathi Velur King 24x7 |1 Aug 2024 7:54 AM GMT
பலமத்தி வேலூரில் மகாபாரத கதையில் பல்வேறு வேடம் அணிந்து தத்ரூபமாக வேடம் அணிந்து நடிக்கும் களைஞர்கள்.
பரமத்திவேலூர், ஆகஸ்ட்.1- பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி கடந்த ஆடி1-ஆம் தேதி முதல் தொடங்கியது. நிகழ்ச்சியில் மகாபாரத கதையில் வரும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் போன்று அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வேடமணிந்து கதைக்கு ஏற்றால் போல் நடித்தும், நடனமாடியும் பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கதை பாடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இறுதி நாளான (சனிக்கிழமை) ஆடி மாதம் 18-ந் தேதி துரியோதனனை பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக மாரியம்மன் கோவில் முன்பு மண்ணால் சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலை வடிவமைக்கப்பட்டு துரியோதனனை பீமன் வதம் செய்து அதில் இருந்து வரும் ரத்தத்தை எடுத்து திரௌபதி தனது கூந்ததில் தடவிய பின்னரே கூந்தலை முடிந்து கொள்ளுவதோடு நிகழ்ச்சி நிறைவு பெறும். போரில் வெற்றி பெற்ற கலைஞர்கள், நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து போருக்கு பயன்படுத்திய ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்று காவிரி ஆற்றில் சுத்தம் செய்து காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி் நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் மகாபாரத கதை பாடும் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story