கரூரில், தெய்வத் திருமண விழாவிற்கு முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது.
Karur King 24x7 |1 Aug 2024 9:14 AM GMT
கரூரில், தெய்வத் திருமண விழாவிற்கு முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது.
கரூரில், தெய்வத் திருமண விழாவிற்கு முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி உடனுறை அருள் தரும் ஆனிலை அலங்கார வள்ளி, அருள் தரும் ஆனிலை சௌந்தரநாயகி திருக்கோவிலில், திருமணத்தடை உள்ளவர்கள் வேண்டினால் திருமணம் நடைபெறும் தலமாக உள்ளது. இதன் காரணமாக ஆண்டு முழுவதும் திருக்கோவிலில் தெய்வங்களுக்கு திருமணம் செய்து வைத்து, தடைபட்ட தங்கள் திருமண காரியத்தை பக்தர்கள், பொதுமக்கள் நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியை அனைவரும் அறியும் வகையில், கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு ஆண்டுதோறும் ஆடி தெய்வ திருமண விழா என்ற பெயரில் நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் 26 ஆம் ஆண்டு ஆடி தெய்வத் திருமண விழா, வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. திருமணம் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று கோவில் வளாகத்தில் முகூர்த்த காலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, கோவிலில் முன்பு முகூர்த்த கால் நட்டு வைத்து, பூஜைகள் செய்து சிறப்பித்தனர் கரூர் ஸ்ரீ மகா அபிஷேக குழுவினர். இந்த நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் ஸ்காட் தங்கவேல், துணைத் தலைவர்கள் அன்பு, குமரவேலு மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story