வழிப்பறி வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்
Salem (west) King 24x7 |1 Aug 2024 9:35 AM GMT
போலீசார் சிறையில் அடைத்தனர்
சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணத்தை சேந்தவர் யுவராஜ். இவர் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் ஊழியராக ஆத்தூர் அருகே நாவக்குறிச்சியை சேர்ந்த குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் நிதி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட தொகையில் வசூலான ரூ.12 லட்சத்து 9 ஆயிரத்தை எடுத்து கொண்டு மாசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு டெபாசிட் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது அவர்களை வழிமறித்து ஒரு கும்பல் பணம் பறித்தது. இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர். மேலும் திருச்சியை சேர்ந்த சித்திக் (வயது 30) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து அவர் சேலம் ஜே.எம். 5-வது கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
Next Story