இடதுசாரிகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்
Dindigul King 24x7 |1 Aug 2024 10:02 AM GMT
இடதுசாரிகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்
3வது முறையாக பாஜக அரசு பதவி ஏற்றதையடுத்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார் அதில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணிப்பு செய்தார் பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் பெரும்பாலான மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து CPM, CPI, CPI (ML) இடதுசாரி கட்சிகள் கூட்டணி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக திண்டுக்கல் மணிக்கூண்டில் இருந்து பெரியார் சிலை வழியாக ஊர்வலமாக வந்த பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது மத்திய அரசுக்கு எதிராகவும் மத்திய நிதி அமைச்சருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Next Story