தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற காந்தி சிலையிடம் கோரிக்கை மனு..
Rasipuram King 24x7 |1 Aug 2024 12:41 PM GMT
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற காந்தி சிலையிடம் கோரிக்கை மனு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என காந்தி சிலையிடம் கோரிக்கை மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் வழக்கறிஞர் ஆர்.டி. இளங்கோ தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் மாநில இணை செயலாளர் கே. பழனிவேலு, மாநில இயக்குனர் சந்திரசேகர், ஈரோடு மாவட்ட தலைவர் சஞ்சய் சொக்கலிங்கம், மகளிர் அணி தொட்டியம் சித்ராதேவி, ஈரோடு கிருஷ்ணவேணி, வெண்ணிலா, கிருஷ்ணகுமாரி, புஷ்பலதா, மாவட்ட இணை செயலாளர் நடேசன், வெங்கடாசலம், திருச்சி வீராசாமி, ராசிபுரம் நகர தலைவர் சீனிவாசன், செயலாளர் ஜெயக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ராசிபுரம் பஸ்நிலைய மாற்ற தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், ஏடிசி டிப்போ, ஆண்டகலூர் கேட் ஆகிய பகுதியி் பஸ்நிலையம் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், லாட்டரி, போதை பொருள் விநியோகத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும், ராசிபுரம் நகர பகுதி மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிகள் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. முக்கியமாக ஒரு வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. காவல்துறை உதவியுடன் நகராட்சி நிர்வாகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மின் வெட்டு ஏற்படுவதை கண்டிக்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். தீர்மான நகலை நகராட்சியில் உள்ள காந்தி சிலையில் கோரிக்கை மனுவாக அளித்தனர். மனுவை வாங்க நகராட்சியில் கமிஷனர் கூட இல்லை. இதனால், காந்தி சிலையிடம் மனு அளித்தோம் என தலைவர் இளங்கோ கூறினார்.
Next Story