ராசிபுரத்தில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்..
Rasipuram King 24x7 |1 Aug 2024 1:02 PM GMT
ராசிபுரத்தில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்..
ராசிபுரத்தில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.. திடீரென 50க்கும் மேற்பட்டோர் கனரா வங்கி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற வரை தடுத்து நிறுத்தி,மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு 2024-25 ஆம் ஆண்டுக்கு நிதி அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்ததை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு,மக்கள் மீது கொடூரமான புதிய வரி விதிப்பு,உணவு மானியம் உரம் மானியம் வெட்டு,கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி குறைத்து சலுகை, 100 நாள் வேலைவாய்ப்புக்கு நிதி குறைத்து ஏழை மக்கள் வயிற்றில் அடிப்பு,மக்கள் நலனுக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் திடீரென்று கனரா வங்கி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி முன்பு அமர முயன்ற கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..
Next Story