ஆதித்தமிழர் பேரவையினர் திருச்செங்கோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Tiruchengode King 24x7 |1 Aug 2024 1:22 PM GMT
ஆதித்தமிழர் பேரவையினர் திருச்செங்கோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் அருந்ததியர்களுக்கு கொடுக்கப்பட்ட மூன்று சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும் என ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து திருச்செங்கோட்டில் ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட செயலாளர் சரவணகுமார் தலைமையில்பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும் கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் மாநில துணைச்பொது செயலாளர் செல்வ வில்லாளன்,மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசி மாநில தூய்மை பணியாளர் அணி செயலாளர் பாண்டியன் மாவட்டதலைவர் சிவசங்கர் ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story