அருந்ததியர்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டிய முன்னாள் முதல்வர் கலைஞருக்கு வாழ்த்து
Tiruchengode King 24x7 |1 Aug 2024 1:31 PM GMT
அருந்ததியர்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டிய முன்னாள் முதல்வர் கலைஞருக்கு வாழ்த்து
அருந்ததியர்களுக்கான 3% உள்ளிட ஒதுக்கீட்டின் மூலம், சமூகநீதியை நிலைநாட்டிய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையை, இன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, உறுதி செய்திருப்பது, திராவிட மாடல் அரசின் சமூகநீதி பயணத்தின் மணி மகுடம். இதனை கொண்டாடும் விதமாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் சீத்தாரம்பாளையம் அருந்ததியர் காலணி பகுதியில் பொதுமக்களுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இந்நிகழ்வில் திமுக நகரக் கழகச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட அயலக அணி அமைப்பாளர் சாதிக், மாவட்ட தொண்டர் அணி துணைத் தலைவர் எஸ் கே டி. தனவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் கலை மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story