நாமக்கல் சாய்பாபா கோவிலில் வியாழன் சிறப்பு வழிபாடு!

108 தாமரை மலர் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சாய்பாபாவுக்கு ஆரத்தி, கலச பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
நாமக்கல் - திருச்சி சாலை, இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில் இன்று குரு வார தினமான வியாழக்கிழமையை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 108 தாமரை மலர் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சாய்பாபாவுக்கு ஆரத்தி, கலச பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு மஹா மங்கள ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story