சுற்றுலா தளமாக மாறிய பரமத்தி வேலூர் காவிரி பாலம்.
Paramathi Velur King 24x7 |1 Aug 2024 2:28 PM GMT
பரமத்தி வேலூர் காவிரி பாலத்தில் சுற்றுலாத்தளம் போல் கண்டு ரசித்து செல்லும். பொதுமக்கள்.
கர்நாடகா மாநிலம் காவிரி கரையோர பகுதிகளில் அதிக அளவில் மழை பொழிந்து காவிரியில் தண்ணீர் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இதில் நாமக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டம் இரண்டையும் இணைக்கும் காவிரியின் பாலத்தில் இரு கரையையும் தொட்டுக்கொண்டு செல்லும் தண்ணீரை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றம் பரமத்தி வேலூர்,கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளயம்,பாலத்துறையைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து ரசித்து செல்கின்றனர். மேலும் தங்களது செல்போனில் செல்ஃபி எடுத்தும் அதிக அளவில் தண்ணீரை பார்த்த மகிழ்ச்சியடைந்து செல்கின்றனர். இதனால் காலை முதல் மாலை வரை பரமத்தி வேலூர் காவிரி பாலம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. இதனால் காவிரி பாலம் சுற்றுலாதளம் போல் காட்சியளிக்கின்றது.
Next Story