சுங்ககேட் அருகே பணி முடித்து வீடு திரும்பியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
Karur King 24x7 |1 Aug 2024 2:39 PM GMT
சுங்ககேட் அருகே பணி முடித்து வீடு திரும்பியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
சுங்ககேட் அருகே பணி முடித்து வீடு திரும்பியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகே உள்ள சுங்ககேட் டிஜிஏ காம்ப்ளக்ஸில் வசித்து வந்தவர் சுப்பையா வயது 43. இவர் ஜூலை 30ஆம் தேதி காலை 7:30- லிருந்து 8 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் பணி முடித்துவிட்டு தனது வீட்டின் அருகே வந்தபோது மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பையாவின் மனைவி சாண்டில்டாவிடம் தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, மயங்கி கிடந்த சுப்பையாவை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சுப்பையாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த சான்டில்டா, சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த சுப்பையாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Next Story