தண்ணீரில் மூழ்கிய ராஜ வாய்க்கால் பாலம்.

தண்ணீரில் மூழ்கிய ராஜ வாய்க்கால் பாலம்.
காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் மூழ்கிய ராஜ வாய்கால் பாலம்.
பரமத்தி வேலூர்,.ஆகஸ்ட்:2,. மேட்டூர் அனையில் இருந்து 1 லட்சத்து 75 அயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு சில பகுதிகளில் கரையோரத்தில் வசிக்கும் மக்களை தமிழக அரசு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னின்று பாதுகாப்பான இடங்களில் முகாம் அமைத்து தங்க வைத்துள்ளனர். பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையம் காவிரி படுகை அனையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் காவிரியில் இருந்து பிரியும் ராஜ வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் வாய்க்கால் தெரியாத அளவில் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜேடர்பாளையம் பரிசல் துறையில் இருந்த மீனவர்களை முன்னதாகவே வெளியேற்றிவிட்டனர். இந்த நிலையில் இன்று பரிசல் துறைக்கு செல்லும் ராஜ வாய்க்கால் பாலம் தண்ணீல் மூழ்கி காவிரியிலும் ராஜ வாய்க்காலிலும் தண்ணீர் ஒன்றாக செல்கின்றன. இதனால் அப்பகுக்கு செல்ல பொதுமக்களுக்கு பொதுப்பணித்து துறையினர் தடை விதித்து பாதையை அடைத்தும் அந்தபகுதியில் ஜேடர்பாளையம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story