பழைய கோட்டை சாலையில் தொடர் செல்போன் பறிப்பு
Kangeyam King 24x7 |1 Aug 2024 3:56 PM GMT
காங்கேயம் பழைய கோட்டை சாலையில் தொடர்ந்து செல்போன் பறித்து செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்குமா பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து பழைய கோட்டை சாலை போக்குவரத்து பணிமனை வரை இருபுறமும் மருத்துவமனைகள், மெடிக்கல்ஸ், துணிக்கடை, டீக்கடை மற்றும் பழக்கடைகள் என சுமார் 500க்கும் மேற்பட்ட கடையில் இங்கு உள்ளது. இந்த சாலையில் காலை முதல் மாலை வரை பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வாகன போக்குவரத்தும் அதிகமாக காணப்படுகிறது. இங்குள்ள மருத்துவமனைகள், மெடிக்கல்ஸ், மற்றும் கடைகளுக்கு நாள் முழுதும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வருவது வழக்கம். மேலும் இந்த சாலை உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களில் திருடர்கள் ஊடுருவுகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் குழந்தைகள் ஆடைகள் விற்பனை கடையில் தனியாக இருந்த பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். எதனால் அந்த சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது போன்ற கண் முன்னே செல் போன் பறிப்பு சம்பவங்கள் இந்த சாலையில் வழக்கமாகியுள்ளது. கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு கடைக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்தும் இந்த வேலையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காங்கேயம் நகர் பகுதியில் உள்ள செல்போன் விற்பனை கடைகளில் பழைய செல்போன்கள் குறைந்த விலையில் வாங்குவது திருடர்களுக்கு உதவுவது போல் உள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த பகுதியில் திருட்டுக்கள் நடைபெறுவதும் தொடர்கதை ஆகியுள்ளது. பழைய செல்போன் வாங்கும் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் அத்திரிக்கவேண்டும் என்கின்றனர். காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையைஎழுந்துள்ளது.
Next Story