வெள்ளக்கோவிலில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மாணவிகள் விடுதி

வெள்ளக்கோவிலில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மாணவிகள் விடுதி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வெள்ளகோவில் கரூர் சாலை அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ஆதி திராவிட நல பள்ளி மாணவியர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 24 மாணவிகள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவச உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. மாடியில் ஒரே பகுதியில் கட்டப்பட்டுள்ளன இவற்றின் சுவற்றில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் குழாய்களை சரிவர பராமரிக்காததால் நீர் கசிவு ஏற்பட்டு சுவர்கள் மிகவும் சேதம் அடைந்துள்ளது. குழாய்களில் நீர் கசிவை சரி செய்து சுவர்களுக்கு சிமெண்ட் பூச்சு வேலை செய்து பெயிண்ட் அடித்தால் கட்டிட சேதத்தை தவிர்க்க முடியும். மாணவிகள் தங்கி இருக்கும் கட்டிடத்தில் ஆபத்து ஏதாவது நடப்பதற்கு முன் சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Next Story