பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின்

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின்
ஜாமின்
பெண்போலீசாரை அவ தூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்க ருக்கு வேப்பந்தட்டை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பெண் போலீசாரை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், அந்த தனியார் யூடியூப் சேனலின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் கடந்த மே மாதம் பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை வேப்பந்தட்டை தாலுகா மாவட்ட உரிமையி யல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக சவுக்கு சங்கரை வேப்பந்தட்டை கோர்ட்டில் பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்து வேப்பந்தட்டை கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பர்வதராஜ் ஆறுமுகம் சவுக்கு சங்கரை விசாரிக்க போலீசார் காவல் கேட்டதற்கு அனுமதி மறுத்து விட்டார். சவுக்கு சங்கரின் உடல்நிலை மற்றும் வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு அவருக்கு சொந்த ஜாமீன் வழங்கினார். ஒரு வாரத்திற்குள் 2 நபர் மற்றும் பிணைய தொகை ரூ.20 ஆயி ரத்தை செலுத்த உத்தரவிட் டார். பின்னர் போலீசார் சவுக்கு சங்கரை மற்றொரு வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்க வாகனத் (தில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
Next Story