கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
Dindigul King 24x7 |2 Aug 2024 4:01 AM GMT
கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. டாப்செட்கோ கடன் திட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.400 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இலக்கினை காட்டிலும் கூடுதலாக ரூ.389.034 இலட்சம் கடன் முன் மொழிவுகள் என மொத்தம் ரூ.789.034 இலட்சம் மதிப்பீட்டிலான கடன் முன்மொழிவுகள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, 197 சதவீதம் இலக்கு எய்தப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் டாம்கோ கடன் திட்டத்திற்கு, பொதுக்கடன் தொகை ரூ.25.00 இலட்சம் மற்றும் குழுக்கடன் தொகை ரூ.3.06 கோடி என மொத்தம் ரூ.3.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டாம்கோ கடன் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.800 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இலக்கினை காட்டிலும் கூடுதலாக ரூ.13.90 இலட்சம் கடன் முன் மொழிவுகள் என மொத்தம் ரூ.813.90 இலட்சம் மதிப்பீட்டிலான முன்மொழிவுகள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, 101.74 சதவீதம் இலக்கு எய்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் டாம்கோ கடன் திட்டத்திற்கு, பொதுக்கடனாக ரூ.2.00 கோடி, கைவினைஞர் கடனாக ரூ.5.00 இலட்சம், குழுக்கடனாக ரூ.5.90 கோடி, கல்விக்கடனாக ரூ.5.00 இலட்சம் என மொத்தம் ரூ.8.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.
Next Story