குரும்பலூர் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
Perambalur King 24x7 |2 Aug 2024 5:13 AM GMT
ஆய்வு
நீர்வளத் துறையின் மூலமாக ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் 2.கி.மீ தூரம் குரும்பலூர் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணியின் மூலமாக லாடபுரம் சிறிய ஏரி, மேலப்புலியூர் ஏரி மற்றும் காட்டுவாரியின் மூலம் குரும்பலூர் ஏரிக்கு தண்ணீர் வரும். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை உதவிப்பொறியாளர்கள் பெ.கமலக்கண்ணன், தி.தினகரன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் சிவா, கனிமவளத்துறை உதவி இயக்குநர் பெர்னாட், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் ஜெகன் ஆரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story