ராசிபுரம் நாமக்கல் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

ராசிபுரம் நாமக்கல் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் முக்கிய சாலையாக நாமக்கல் சாலை ஆத்தூர் சாலை சேலம் சாலை போன்ற பிரதான சாலைகள் வழியாக பல்வேறு வாகனங்கள், மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் சாலை பகுதியில் நியாய விலை கடை கடைக்கு உப்பு லோடு ஏற்றி வந்த டாரஸ் லாரி வளைவில் திரும்பும் போது டயர் மாட்டி கொண்டதால் உள்ளே செல்ல இயலவில்லை. மேலும் அதிக பாரம் ஏற்றி வந்ததால் சாலையில் பள்ளமும் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் செல்லக்கூடிய பள்ளி, கல்லூரி வாகனங்கள், மற்றும் அரசு அலுவலக பணிக்கு மற்றும் பல்வேறு பணிக்கு செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள், கார்கள், மற்றும் பேருந்துகள் என அணிவகுத்து நீண்ட தூரம் நின்றது. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
Next Story