அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் இடையே கடும் வாக்குவாதம்!

பொதுப் பிரச்சினைகள்
புதுக்கோட்டையில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் இடையே கடும் வாக்குவாதம். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதலாக அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இன்று திருச்சி செல்ல தயாராக இருந்த அரசு பேருந்து, தாமதமாக புறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் இயக்கப்பட இருந்த PLA தனியார் பேருந்து செல்ல கால தாமதமானதால் அந்தப் பேருந்தில் நடத்துனர் ஓட்டுநர், அரசு பேருந்து நடத்துனர் ஓட்டுநர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் பேருந்து இயக்கப்பட இருக்கும் நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கப்பட்டால் நாங்கள் எதற்காக பேருந்தை இயக்க வேண்டும் என அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது...
Next Story