ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீர் ஆய்வு!
Thoothukudi King 24x7 |2 Aug 2024 5:48 AM GMT
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்..
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் - வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் இன்று ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் வாங்க வந்த மக்களிடம் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என்று விற்பனையாளருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, அண்ணா நகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..
Next Story