சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு!.
Thoothukudi King 24x7 |2 Aug 2024 5:53 AM GMT
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது..
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், பழங்கள், சந்தனம், வீபூதி, தேன் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்..
Next Story