தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை.
Thoothukudi King 24x7 |2 Aug 2024 6:35 AM GMT
தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை நடைபெற்று வருகிறது. கங்கோத்திரி மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நதி நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை அஞ்சல் துறை செய்து வருகிறது. 250மி.லி அளவு கொண்ட ஒரு பாட்டில் கங்கை நதி நீர் ரூ.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுப நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குதல், புதுமனைப்புகுதல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கங்கை நீர் பாட்டில்களின் விற்பனை தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்று வருகிறது. வரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடியிலுள்ள அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் தனி ஸ்டால் அமைக்கப்பட்டு சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர்(பொறுப்பு) சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்...
Next Story