மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ. மறியல் போராட்டம்.
Paramathi Velur King 24x7 |2 Aug 2024 8:12 AM GMT
மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ கட்சியினர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் மறியல் போராட்டம் நடத்தினர்.
பரமத்தி வேலூர், ஆக.2- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பிஎஸ்என்.எல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சிகளை சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு செய்து நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயலை கண்டித்தும், மூன்று குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்தியதை வாபஸ் பெற வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதை பரமத்தி வேலூர் மோகனூர் பிரிவு ரோட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோஷங்களை எழுப்பியவாறு பஸ் நிலையம், அண்ணா சாலை, திருவள்ளூர் சாலை வழியாக பி.எஸ்.என்.எல் அலுவலகம் வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தை சி.பி.ஐ மாவட்ட செயலாளர் அன்புமணி தொடங்கி வைத்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், பரமத்திவேலூர் தாலுகா செயலாளர் சண்முகம், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன். பரமத்திவேலூர் வட்டக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன். கருப்பையா செல்வராணி உட்பட 56 பேர்களை வேலூர் போலீசார் கைது செய்து பள்ளி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
Next Story