கொல்லிமலையில் உள்ள அருவிகளுக்கு செல்ல தடை!
Namakkal King 24x7 |2 Aug 2024 8:17 AM GMT
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட். 2, 3 தேதிகளில் வல்வில் ஓரி விழா நடைபெறும்.
இன்று வெள்ளிக்கிழமை நாளை சனிக்கிழமை கொல்லிமலையில் உள்ள அருவிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. கொல்லிமலையில் இன்றும், நாளையும் வல்வில் ஓரி விழாவை ஒட்டி, சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
Next Story