மாநில இறகு பந்து போட்டி சிவகங்கை மாணவி முதலிடம்
Sivagangai King 24x7 |2 Aug 2024 9:04 AM GMT
சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் இறகுப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவிலான இறகுப் பந்து இரட்டையா் பிரிவு போட்டியில் முதலிடம் பிடித்தாா். இவரை மாவட்ட இறகுப் பந்துக் கழகம், பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா். கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான சப்-ஜூனியா் தரவரிசை இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோா்களுக்கான இரட்டையா் பிரிவு இறகுப் பந்து போட்டியில் சிவகங்கை மாவட்டம், சாா்பில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மோக்ஷிதா ஜோடி இறுதிப் போட்டியில் 21-16, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனா். இந்நிலையில், மாணவி ராஜராஜேஸ்வரியை சிவகங்கை மாவட்ட இறகுப் பந்து கழகத்தின் தலைவா் ராமகிருஷ்ணன், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா்கள், மாணவியின் தந்தை ஜெயவேல் ஆகியோா் பாராட்டினா்.
Next Story