கடை பூட்டி உடைத்து திருட்டு: சிசிடிவி வெளியீடு!
Thoothukudi King 24x7 |2 Aug 2024 10:13 AM GMT
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் ஆரோக்கியா பால் விற்பனை நிலையத்தில் நள்ளிரவில் தொப்பி மற்றும் முகத்தில் கர்சிப் அணிந்தபடி பூட்டை உடைத்து மூன்று மர்ம நபர்கள் கடையின் உள்ளே புகுந்து ரூபாய் 50,000 மற்றும் ஐஸ்கிரீம்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..
தூத்துக்குடி டூ விபுரம் இரண்டாவது தெருவில் பெருமாள் என்பவர் ஆரோக்கியா பால் ஏஜென்சி மற்றும் ஐஸ்கிரீம் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று இரவு இவர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் இந்நிலையில் பெருமாள் இன்று அதிகாலை கடையை திறந்து பால் வியாபாரம் செய்வதற்காக வந்துள்ளார் அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெருமாள் கடையில் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் கல்லாவில் இருந்த ரூபாய் 50,000 பணம் மற்றும் ஐஸ்கிரீம் பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது இதை அடுத்து கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அதில் நள்ளிரவில் சுமார் இரண்டரை மணி அளவில் தொப்பி மற்றும் முகத்தில் கர்சிப் அணிந்தபடி மூன்று இளைஞர்கள் அந்தப் பகுதியில் நோட்டமிட்டபடி சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் நின்று இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நூழைந்து கடையிலிருந்து பணம் 50 ஆயிரம் மற்றும் ஐஸ்கிரீம் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் பெருமாள் மத்திய பாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருட்டு கும்பலை தேடி வருகின்றனர் இந்த திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Next Story