தினை பயிரிட்டால் அதிக லாபம். வேளாண் அதிகாரி கலைச்செல்வன் தகவல்.
Karur King 24x7 |2 Aug 2024 10:42 AM GMT
தினை பயிரிட்டால் அதிக லாபம். வேளாண் அதிகாரி கலைச்செல்வன் தகவல்.
தினை பயிரிட்டால் அதிக லாபம். வேளாண் அதிகாரி கலைச்செல்வன் தகவல். ஆடி மற்றும் புரட்டாசி மாத பட்டம் திணை சாகுபடிக்கு ஏற்ற காலமாக உள்ளது. திணை சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடி உரமாக 12.5 டன் மக்கிய தொழு உரம், கடைசி உழவின் போது பரப்பி நிலத்தை நன்கு உழ வேண்டும். பயிர் அறுவடைக்குப் பின் நிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். வரிசை விதைப்பாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். தூவுவதாக இருந்தால், ஒரு ஹெக்டருக்கு 12.5 கிலோ விதை தேவைப்படும். பயிருக்கு பயிர், பயிர் வரிசைக்கு இடைவெளியாக 22.5 சென்டிமீட்டர் 7.5 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும். இதில் ஒரு ஹெக்டர் தேவையான விதை அளவிற்கு 500 மில்லி திரவ உயிர் உரத்தை அசோஸ்பாசை கலந்து நிழலில் உலர்த்தி அதன் பிறகு விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் அசோஸ்பாசை மணல் கலந்து, நிழலில் உலர்த்தி அதன் பிறகு விதைக்க வேண்டும் நிலத்தில் இடுவதாக இருந்தால் அசோஸ்பாஸை மணல் கலந்து 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து தூவ வேண்டும். ஒரு எக்டருக்கு முறையே 44 கிலோ தலைச்சத்து, 22 கிலோ சாம்பல் சத்து தேவைப்படுகிறது. இந்த பயிரை பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. கதிர்கள் நன்கு காய்ந்து இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்து களத்தில் காய வைத்து அடித்து தானியங்களை பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். இதில் விவசாயிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கூடுதல் விவரங்களுக்கு க.பரமத்தி வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை விவசாயிகள் அணுக வேண்டும் என வேளாண் உதவி இயக்குனர் கலைச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Next Story