சேலத்தில் பீடா கடையில் பணம் திருடியவர் கைது
Salem (west) King 24x7 |2 Aug 2024 11:00 AM GMT
போலீசார் நடவடிக்கை
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 56). இவர் 5 ரோடு அருகே உள்ள அமராவதி நகரில் பீடா கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பண்டல்கள் திருட்டு போனது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வாலிபர் ஒருவர் கடையில் இருந்து பணம் மற்றும் சிகரெட் பண்டல்களை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் மேற்குவங்காளத்தை சேர்ந்த பூலாக் (20) என்பதும், ஓட்டலில் வேலை பார்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story