அனுமதி அற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு பதிவு செய்ய உத்தரவு
Sivagangai King 24x7 |2 Aug 2024 11:20 AM GMT
சிவகங்கை மாவட்டம், அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக வருகின்ற 31.01.2025 வரை ஆறு மாத கால நீட்டிப்பு செய்து அரசாணையில் மாற்றம் இன்றி அரசு கடிதம் (நிலை) எண்.122/நவ4(1)/2024, நாள்.25.06.2024-இல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் மலையிடப் பகுதிகளில் (HACA) அமையும் பட்சத்தில் அரசு கடிதம் எண்.15535/நவ4(3)/2019, நாள்.18.02.2020-இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story