கோவில் குறித்து அவதூறு வீடியோ யூடியூபர் மீது காவல் நிலையத்தில்

வெள்ளகோவிலில் கோவிலை பற்றி அவதூறு வீடியோ யூடியூபர் மீது போலீசில் புகார்
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம்  யூடியூபர் பாண்டியன். இவர் தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றார்.  திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் அங்குள்ள கோவில் பற்றிய ஒரு வீடியோ காட்சியை  யூடியூப்  சேனலில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் துவக்கத்திலேயே 'வாழ்க பாலஸ்தீனம்!" வீழ்க சியோனிசம்!"   'வாழ்க வாழ்க வாழ்க பாலஸ்தீனம்!"  என்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் துவங்கும் அந்த வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவில் குறித்து அதில் உண்மைக்கு புறம்பான பல தவறான தகவல் இடம்பெற்றுள்ளது. நேற்று பொதுமக்கள் கோவில் குளத்தவர்கள் ஒன்று கூடி கூட்டம் நடத்தினர். பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளகோவில் காவல் நிலையத்தில் மற்றும் சைபர் கிரைம் போலீசிலும் 100க்கு மேற்பட்டோர் சென்று புகார் தெரிவித்தனர் அந்தக் கூட்டத்தில் ஊர் பெயரை மட்டுமல்ல கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
Next Story