கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா மற்றும் மலர்கண்காட்சி விழா சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
Namakkal King 24x7 |2 Aug 2024 11:42 AM GMT
கொல்லிமலையில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ம் தேதி வல்வில் ஓரி விழா அரசு விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது. வல்வில் ஓரி விழாவில் கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை துறையின் சார்பாக மலர் மற்றும் மருத்துவப் பயிர்கள் கண்காட்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர்கள் வில்வித்தையில் சிறந்து விளங்கி கொல்லிமலையை ஆண்ட மன்னராவார். இவர் தானத்தில் சிறந்து விளங்கியதால் கடையேழு வள்ளல்களில் ஒருவராக பொதுமக்களாலும், வரலாற்று அறிஞர்களால் போற்றப்படுகிறார். இவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கில், வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழாவும், கொல்லிமலை வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி தொடக்க விழா இன்று (02.08.2024) நடைபெற்றது. இவ்விழாவில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் .கு.பொன்னுசாமி , நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன் தலைமையில், மலர்க்கண்காட்சி மற்றும் அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வட்டாரத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ம் தேதி வல்வில் ஓரி விழா அரசு விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது. வல்வில் ஓரி விழாவில் கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை துறையின் சார்பாக மலர் மற்றும் மருத்துவப் பயிர்கள் கண்காட்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மலர் கண்காட்சியானது ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. வனத்துறை, காவல்துறை, வேளாண்மை துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, கூட்டுறவு துறை உள்ளி 22 அரசு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்த பணி விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவப்பயிர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மருத்துவ பெயரின் தாவரவியல் பெயர் பயன்படும் பகுதி மருத்துவப் பயன்கள் குறித்து விளக்க குறிப்பு வைத்து மருத்துவப்பயிர்கள் கண்காட்சி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கொல்லிமலையில் அரப்பளீஸ்வரர் ஆலயம், கொல்லிப்பாவை, மாசிப்பெரியசாமி ஆலயம், ஆகாய கங்கை அருவி, மாசில்லா அருவி, சீக்குப் பாறை, தாவரவியல் பூங்கா, வாசலூர்ப்பட்டி படகு இல்லம், நம்ம அருவி உள்ளிட்ட சுற்றுலாப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்நிகழ்ச்சியில் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் அ.மாதேஸ்வரி, கொல்லிமலை அட்மா குழு தலைவர் எஸ்.செந்தில் முருகன், மாவட்ட சுற்றுலா அலுவலர் மு.அபராஜிதன், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) இ.கார்த்திகா, பழங்குடியினர் திட்ட அலுவலர் தே.பீட்டர் ஞானராஜ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story