தேசிய தொழுநோய் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு

X
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக தேசிய தொழுநோய் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர். சீனிவாசன் மற்றும் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார், கல்லூரியின் துணை முதல்வர், இயக்குனர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,. இதில் இளநிலை ஆங்கிலத்துறையைச் சார்ந்த இரண்டாமாண்டு மாணவி பிரின்சி அபிஷா வரவேற்புரை வழங்கினார். இம்முகாமிற்கு எம். சந்திரமோகன், மருத்துவர், கே.எஸ்.ஆர் பல் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அவர்கள் கலந்துகொண்டு தொழுநோய் ஒழிப்பதற்கான தற்போதைய முயற்சிகள் மற்றும் அதற்கான வழிமுறைகளையும், நாம் அன்றாடம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கவழக்கங்கள் பற்றியும் சிறப்புரையாற்றினார். இறுதியாக முதலாமாண்டு ஆங்கிலத்துறையைச் சார்ந்த ஜெ. ஜெயசுவி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story

