கரூரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.
Karur King 24x7 |2 Aug 2024 1:21 PM GMT
கரூரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.
கரூரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு. தமிழக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சுமார் 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டு,திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜாமீன் கேட்டு முறையிட்ட வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் வடிவேல் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்து எம் ஆர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்தார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் வருகை தருவதை அறிந்த அதிமுக கட்சி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஒன்று திரண்டு தங்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுகவினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் கை அசைத்து நன்றி தெரிவித்தார்.
Next Story