இயந்திரங்களை பயன்படுத்தி மரங்கள் அழிப்பு கொடைக்கானலில் கொதிப்பு
Dindigul King 24x7 |2 Aug 2024 2:17 PM GMT
இயந்திரங்களை பயன்படுத்தி மரங்கள் அழிப்பு கொடைக்கானலில் கொதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயந்திரங்களை பயன்படுத்தி மரங்களை அழித்து வருவதால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையான கொடைக்கானல் வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி .வனத்துறை அதிகாரிகள் பணத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஜேசிபி . பொக்லைன் இயந்திரம் போர்வெல் இயந்திரம் அனுமதித்து மலைகளை குடைவது தொடர்ந்து மரங்களை அழித்து வருவது உள்ளிட்ட மலைகளை அழிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் . தற்போது நமக்கு பாடமாக அருகே உள்ள கேரளா வயநாடு பகுதியை பார்த்து மலைகளை காப்பதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கொடைக்கானலும் வய நாடாக மாறுவதற்கு அதிகாரிகளே முழு பொறுப்பாக இருக்க வேண்டும். தமிழக முதல்வர் மேற்குத் தொடர்ச்சி மலையான கொடைக்கானல் மலைகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தவர்கள் வருகின்றனர். மேலும் கண்காணிப்பு குழு அமைத்து இயந்திரங்கள் நடவடிக்கைகளை ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story