ஆடி வெள்ளி அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை
Sangagiri King 24x7 |2 Aug 2024 3:36 PM GMT
சங்ககிரி: ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி கல்படங்கும் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை. திரளான பக்தர்கள் தரிசனம்...
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையையொட்டி காலை முதலே அம்மனுக்கு பால்,தயிர்,சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர், குங்குமம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது . பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது இதில் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் சுவாமியை வழிபாடு செய்தனர்.
Next Story