ஆடி பெருக்கு காவிரி ஆறு மற்றும் வாய்க்கால்களில் குளிக்க பொதுமக்களுக்கு தடை..

ஆடி பெருக்கு காவிரி ஆறு மற்றும் வாய்க்கால்களில் குளிக்க பொதுமக்களுக்கு தடை..
சங்ககிரி: ஆடி 18 ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவேரி ஆறு மற்றும் வாய்க்கால்களில் பொதுமக்கள் புனித நீராட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதித்து அறிவிப்பு...
ஆடி 18 முன்னிட்டு ஆடிப்பெருக்கு விழா வருடம் தோறும் பொதுமக்கள் கொண்டாடி வருவது வழக்கம் இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்படுவதால் ஆடிப்பெருக்கு முன்னிட்டு சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவிரி ஆறு மற்றும் நீர் பாசன வாய்க்கால்களில் பொதுமக்கள் நீராட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரை கண்காணிப்பு பணியில் இரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story