தெடாவூர்- தம்மம்பட்டி இடையே சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

தெடாவூர்- தம்மம்பட்டி இடையே சாலை பணிகளை அதிகாரி ஆய்வு
அதிகாரி ஆய்வு
கெங்கவல்லி:ஆத்தூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் உள்ள தெடாவூர்- தம்மம்பட்டி சாலை, கோபாலபுரம்- கந்தசாமி புதூர் சாலை, வடகுமரை- புனல்வாசல் சாலை, காட்டுக்கோட்டை- மணிவிழுந்தான் சாலைகளில் ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் முடிவடைந்த சாலை மற்றும் பாலம் பணிகள் ஆய்வு நடந்தது. சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிகுமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஆத்தூர் உட்கோட்ட சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
Next Story