நத்தக்கடையூர் அருகே பேருந்து ஓட்டுநர் தற்கொலை

நத்தக்கடையூர் அருகே பேருந்து ஓட்டுநர் தற்கொலை
நத்தக்காடையூர் அருகே அரசு பேருந்து ஓட்டுனர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார் காங்கேயம் காவல்துறை விசாரணை
நத்தக்காடையூர் அருகே உள்ள புது வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 56). அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தார். இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சுப்ரமணி கடந்த மாதம் 19 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று முன்தினம் மதியம் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் .இது குறித்து காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story