முன்விரோத தகராறு: தம்பதி மீது வழக்கு

உளுந்துார்பேட்டை அருகே உள்ள எறையூரைச் சேர்ந்தவர் சூசைநாதன் மகன் பிரான்சிஸ் சேவியர், 24; அதே பகுதியைச் சேர்ந்தவர் மிக்கேல், 56; இருவருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் பிரான்சிஸ் சேவியரை வீட்டிற்கு வரவழைத்து மிக்கேலும், அவரது மனைவி கனிகா மேரியும் திட்டி, கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் மைக்கேல், கனிகாமேரி ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

