மக்களை தேடி முதல்வர் திட்ட முகாம்

மக்களை தேடி முதல்வர் திட்ட முகாம்
முகாம்
சின்னசேலம் அடுத்த தகரை ஊராட்சியில் மக்களைத் தேடி முதல்வர் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு, உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். பி.டி.ஒ., ரவிசங்கர் வரவேற்றார். கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் குப்புசாமி மனுக்களைப் பெற்றார். பாண்டியன்குப்பம், திம்மாவரம், கல்லாநத்தம், தகரை, நாககுப்பம், வெட்டிபெருமாள்அகரம், தென் செட்டியந்தல் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்த 923 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும். நீர் வழி தடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி கண்டிப்பாக காலி செய்திட வேண்டும். நத்தம், புறம்போக்கு, மந்தவெளி போன்ற இடங்களில் நீங்கள் பத்தாண்டுகள் இருந்தால் அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ., தெரிவித்தார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் சண்முகம், அமுதா, ஆசைமுத்து, நீலாவதி, கோகிலா, விண்ணரசி, சுலக்சனா, கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story