சேலத்தில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
Salem (west) King 24x7 |3 Aug 2024 3:27 AM GMT
போலீசார் நடவடிக்கை
சேலம் அன்னதானப்பட்டி போலீசார் சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அங்கிருந்து 34 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த காயத்ரி (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story