லாரன்ஸ் படத்தை "மாதிரி இதயத்தாலேயே" வரைந்த ஓவிய ஆசிரியர்

ஓவியா ஆசிரியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக சேவையை பாராட்டும் விதமாகவும், ஏழைகளின் இதயத்தில் இருக்கும் இதயக்கனி லாரன்ஸ் என்பதை குறிக்கும் விதமாகவும் "மாதிரி இதயத்தாலேயே" நடிகர் ராகவா லாரன்ஸ் படத்தை பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். தமிழ் திரை உலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் பணியாற்றி பிரபலமான ராகவா லாரன்ஸ், பின்னர் நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து கலக்கியவர். ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் பணியாற்றாமல், அவரது பெயரில் பல ஆசிரமங்கள் நடத்தி வருகிறார், பல நற்பணிகளை மக்களுக்கு செய்து வருகிறார், ஆதரவற்றோருக்கும், மாற்றுத்திறனாளிக்கும், ஏழை குழந்தைகளுக்கும் நிறைய உதவிகளை வழங்கியுள்ளார். தற்போது லாரன்ஸ் அவர்கள் "மாற்றம்" என்ற அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார், இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார், இதனால் ஏழைகளின் இதயத்தில் இதயக்கனியாக ராகவா லாரன்ஸ் இருக்கிறார், நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது சமூக சேவையை பாராட்டும் விதமாகவும், ஏழைகளின் இதயக்கனி லாரன்ஸ் என்ற வாசகத்துக்கு ஏற்ப மாதிரி இதயத்தாலேயே நீர் வண்ணத்தில் தொட்டு "மாதிரி இதயத்தாலேயே" தித்திக்கும் இதயக்கனியான லாரன்ஸ் படத்தை ஐந்து நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் MGR மாதிரி லாரன்ஸ் அவர்கள் எங்கள் இதயத்தில் இதயக்கனியாக இருக்கிறார் என்று சொல்லி படம் வரைந்தது அருமை என்று ஓவிய ஆசிரியர் செல்வத்தை பாராட்டினார்கள்.
Next Story