கரூரில்,கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் வல்வில் ஓரிக்கு புகழ் மாலை.

கரூரில்,கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் வல்வில் ஓரிக்கு புகழ் மாலை.
கரூரில்,கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் வல்வில் ஓரிக்கு புகழ் மாலை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி கைதேர்ந்த வில்லாளி. இவர் கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதியை ஆண்ட மன்னவரும் ஆவார். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அவரது நினைவை போற்றும் வகையில் வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தினர் கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பு கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் & இளைஞரணி சார்பில் அமைப்பின் தலைவர் வேங்களன் ரவிக்குமார் தலைமையில் 7-வது ஆண்டாக புகழ் அஞ்சலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் வாழவந்தி சரவணன், வாழ்வில் ஓரி திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி, அவரது புகழை போற்றும் வகையில் வாழ்த்தி கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் பொதுச் செயலாளர் ராமமூர்த்தி துறை தலைவர் தென்னரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story