நாமக்கல்லில் ஒரு கோடி மதிப்பில் சித்த மருத்துவமனை.!

ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் 60 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவமனை பணிகளை தொடங்கி வைத்து ஆய்வு
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அவர்கள் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் (பழைய அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி) வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ள சித்த மருத்துவமனையின் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி புதிய வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து சித்த மருத்துவமனை 60 படுக்கை வசதிகளுடன் செயல்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்கள். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் ராசிபுரம் வட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் சித்த மருத்துவமனைக்கான பணிகளை அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். அதன்படி ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வர்ணம் பூசுதல் பல்வேறு உட்கடமை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சித்த மருத்துவமனை சிறப்புடன் செயல்பட கூடுதல் நிதி கேட்டு அரசிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அல்லாது தமிழ்நாட்டில் முதல்முறையாக சித்த மருத்துவத்திற்கென்றே 60 படுக்கைகள் கொண்ட அரசு சித்த மருத்துவமனை, நாமக்கல் நகராட்சி புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் (பழைய தலைமை மருத்துவமனை) வளாகத்தில் செயல்பட உள்ள
Next Story