காங்கேயம் பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை நகராட்சி தலைவர் திறந்து வைத்தார்
Kangeyam King 24x7 |3 Aug 2024 10:37 AM GMT
காங்கேயம் பேருந்து நிலையத்தில் தாய்மார் பாலூட்டும் அறை திறப்பு விழா - காங்கேயம் நகராட்சி தலைவர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் இணைந்து சர்வதேச தாய்ப்பால் வார விழா முன்னிட்டு காங்கேயம் பேருந்து நிலையத்தில் தாய்மார் பாலூட்டும் அறை திறப்பு விழாவும், விழிப்புணர்வு பேரணியையும் நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு காங்கேயம் நகர் மன்ற தலைவர் சூர்யபிரகாஷ் பங்கேற்று பாலூட்டும் அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பின்னர் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார். மேலும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனாம்பாள், திட்ட கண்காணிப்பாளர் ருக்மணி ஆகியோர் பேரணியை வழி நடத்தியும், சில்ட்ரன் சரிட்டாபிள் டிரஸ்ட்ன் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்கள் என சுமார் 80 பேர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story