வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் வழிபாடு

வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் வழிபாடு
வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் வழிபாடு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த மாதமாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றது. இதனை அடுத்து வெள்ளகோவில் மூலனூர் சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பு, ராகியில் காய்ச்சிய கூழ் அம்மனுக்கு படைக்கப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்மொழி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Next Story